மிளகு + 3 பொருட்கள்.. இருந்தால் குழந்தைகளுக்கு சளி இருமல் ஒரு மணி நேரத்தில் கட்டுப்படும்!

0
178
Pepper + 3 ingredients.. Children's cough will be cured in an hour!
Pepper + 3 ingredients.. Children's cough will be cured in an hour!

 

உங்கள் குழந்தை சளி,இருமல் தொந்தரவால் அவதியடைந்து வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணுங்கள்.

தீர்வு 01:

1)கருப்பு மிளகு
2)மஞ்சள் தூள்
3)பனங்கற்கண்டு
4)பால்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகு சேர்த்து லேசாக வறுக்கவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு இடித்த மிளகு,மஞ்சள் தூள் சிட்டிகை அளவு மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் நெஞ்சு சளி,இருமல்,தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 02:

1)துளசி
2)மிளகு
3)தேன்
4)சுக்கு

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் கால் கைப்பிடி துளசி இலைகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

அதன் பிறகு ஐந்து இடித்த மிளகு,ஒரு துண்டு இடித்த சுக்கு சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி,இருமல் தொந்தரவு நீங்கும்.

தீர்வு 03:

1)கற்பூரவல்லி
2)தேன்

இரண்டு அல்லது மூன்று கற்பூரவல்லி இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்த கற்பூரவல்லி சாறு சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி,இருமல் நீங்கும்.

தீர்வு 04:

1)தூதுவளை இலை
2)சீரகம்
3)சுக்கு
4)பூண்டு
5)மஞ்சள் தூள்

ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மிளகு,1/4 தேக்கரண்டி சீரகம்,மூன்று பல் இடித்த பூண்டு மற்றும் ஒரு சிறிய துண்டு இடித்த சுக்கை சேர்த்து சூடாக்கவும்.

பிறகு அதில் 10 தூதுவளை இலை மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் தீராத சளி,இருமல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.