அசைவ விரும்பிகளுக்கு சிக்கன்,மட்டன் என்றால் அதீத பிரியமாக இருக்கிறது.இந்த இரண்டு அசைவ உணவுகளுக்கு அடுத்து விரும்பி சாப்பிடக் கூடிய அசைவமாக இருப்பது மீன்,இறால்,நண்டு போன்ற கடல் உணவுகள் தான்.ஆடு,கோழியை காட்டிலும் கடல் உணவுகளில் தான் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.
கடல் உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக திகழ்கிறது.மீனை போலவே உடலுக்கு நன்மை தரும் மற்றொரு கடல் உணவு இறால்.ஒருமுறை இறாலை ருசி பார்த்துவிட்டால் அதை அடிக்கடி செய்து உண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இறாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.அடிக்கடி இறால் உணவு எடுத்துக் கொண்டால் சருமம் இளமையாக காணத் தொடங்கும்.கண் பார்வை பிரச்சனை இருப்பவர்கள் இறாலை சாப்பிட்டு வரலாம்.அதேபோல் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு இறால் சிறந்த தீர்வாக இருக்கிறது.
இறாலில் நிறைந்திருக்கும் புரதம்,பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.அடிக்கடி இறால் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.இறாலில் உள்ள அயோடின் தைராய்டு ஹார்மோன்களை சுரக்க உதவுகிறது.இறாலில் உள்ள கரோட்டினாய்டு உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது.இறால் சாப்பிடுவவதால் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி ஏற்படுவது கட்டுப்படும்.கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இறாலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.