உடலுக்கு பல நன்மைகள் கிடைக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.இதை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே நாம் பின்பற்றி வரும் பழங்களில் ஒன்றாகும்.வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்த காலம் போய் தற்பொழுது ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் மெல்ல மெல்ல மறந்து வருவதால் தான் உடலில் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உச்சந்தலைக்கு நல்லெண்ணய் வைத்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு வெந்நீரில் குளியல் போட்டால் தலை சூடு,கண் சூடு,உடல் சூடு அனைத்தும் நீங்கிவிடும்.
இந்த எண்ணெய் குளியலை வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும்.எண்ணெய் குளியலால் உடலில் வெப்பநிலை சீராக இருக்கும்.சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகள் சருமம் தொடர்பான பாதிப்புகள் நீங்க எண்ணெய் குளியல் போடலாம்.
தலைக்கு மட்டுமின்றி முகத்திற்கும் ஒரு புதிய பொலிவை எண்ணெய் குளியல் தருகிறது.தலைக்கு எண்ணெய் வைத்து குளித்த பிறகு சிலர் கண் எரிச்சலை உணர்வார்கள்.இது உடல் சூடு வெளியேறுகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.
எண்ணெய் வைத்து குளியல் போடும் பழக்கம் இருந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்களுக்கு எண்ணெய் குளியல் சிறந்த தீர்வாக இருக்கிறது.நல்லெண்ணெயை உடல் முழுவதும் பூசி குளித்தால் மேனி பளபளப்பாகும்.
உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் வலி,வீக்கம் அனைத்தும் சரியாகும்.நல்லெண்ணெய் குளியல் முடி உதிர்தல் பிரச்சனையை போக்க உதவுகிறது.