பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
திரி தோஷத்தை சமன்செய்யும் பூக்களை எப்போதும் சூட வேண்டும்.
குளிச்சியான காலத்தில் உஷ்ணமான பூக்களையும், உஷ்ணமான காலத்தில் குளிர்ச்சியான பூக்களையும் சூட வேண்டும்.
மழைக் காலத்தில் கேசத்துக்கும், கண்ணுக்கும் நன்மை தரும் பூக்களைச் சூட வேண்டும். பாதிரிப்பூ, மல்லிகைப்பூ சூடலாம்.
சூடப்படும் பூ தலையில் மட்டுமே இருக்கும்படி சூடவேண்டும். எப்போதும் தோள்பட்டையிலும் முதுகுப் பகுதியிலும் படாமல் இருக்குமாறு பூக்களைச் சூட வேண்டும்.
துளசி, மரிக்கொழுந்து மற்றும் செவ்வரளி போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்துச் சூடலாம். தலையில் உள்ள ஈறு பேன் போன்றவற்றை நீக்கும். கூந்தலுக்கு நல்ல மணத்தைக் கொடுக்கும்.
கனகாம்பரம் அல்லது ரோஜாவை மாலையாக நம் மார்பில் அணிவதால், இதயம் நலம் பெறும். உடல் முழுவதும் ஒருவித சிலிர்ப்பைத் தருவதோடு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
காகிதப்பூக்கள், பிளாஸ்டிக் பூக்களைத் தலையில் சூடக்கூடாது. ஒற்றை மலராக எந்த வகைப் பூவையும் வைக்கக் கூடாது.