சருமம் அழகு பெற சில இயற்கையான அழகு குறிப்புகள்!!

0
78

 

*முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம்பழச் சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் சீக்கிரமே தழும்புகள் மறையும்.

*துளசியையும் மஞ்சளையும் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பருக்கள் தோன்றாது.

*தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவினால், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் விரைவில் மறையும்.

*சந்தனத்தை பன்னீரில் கலந்து கருமையான உதட்டின் மேல் தடவி வந்தால் நாளடைவில் கருமை நிறம் மாறி சிவப்பாகும்.

*உப்புக் கலந்த நீரில் கால் நகங்களை பத்து நிமிடங்கள் ஊறவைத்து பழைய பிரஷ்ஷினை கொண்டு தேய்த்தால், அழுக்கும் கிருமிகளும் அகன்று கால் சுத்தமாகும்.

*தக்காளி பழச்சாற்றை முகத்தில் தடவி காய்ந்த பின் முகம் கழுவினால் முகத்தில் உள்ள சிறு துவாரங்கள் அடைபட்டு முகத்தில் எண்ணெய் வழியாது.

*தினமும் காலையில் இளநீர் பருகி வந்தால் உடல் குளிர்ந்து அடிக்கடி வரும் முகப்பருக்கள் மறையும்.

*தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் மேனிக்கு அழகு கூடும்.

*முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறைந்து வறண்ட சருமம் மென்மையாகும்.

*சிறிதளவு அரிசி மாவில் தயிர் சேர்த்து இரவில் முகத்தில் பூசி காலையில் முகத்தை அலம்பினால் முகம் சுத்தமாக இருக்கும்.

author avatar
Parthipan K