காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவ சிகிச்சை தீவிரம்!

0
154

சென்னை:
ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் பணியாற்றும் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக புருஷோத்தமன் அவர்கள் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் சிரமம் அடைந்தார். இதன்பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் பணியாற்றிய காவல்துறை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திற்கு முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிரமாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

Previous articleமனைவியின் மாதவிடாயின் போது கணவனுக்கு விடுப்புக் கொடுத்து தனியார் நிறுவனம் அசத்தல்!!
Next articleபகுதிநேர ஆசிரியர் சம்பளம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறவிப்பு!