இன்று ஆரோக்கியமில்லாத உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.உணவகங்களில் மட்டுமின்றி தற்பொழுது வீடுகளிலும் ஜங்க்புட்,பாஸ்ட்புட் சமைத்து உண்ணப்படுகிறது.
தினசரி உணவில் கால்சியம்,புரதம் போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும்.ஆனால் இன்று தயாரிக்கப்படும் உணவுகளில் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிகளவு நிறைந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறது.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் உடலில் கேட்ட கொலஸ்ட்ரால் அதிகளவு உற்பத்தியாகி உடல் பருமன்,இதய நோய்,உடல் சோர்வு,சர்க்கரை,இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே உடலில் உள்ள கொழுப்பை கரைக்க கீழ்கண்ட குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
1)தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2)சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
3)காய்கறிகள்,பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
4)துரித உணவுகள்,எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
5)பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.குளிர்பானங்களை அருந்தக் கூடாது.
6)தினம் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட வேண்டும்.முளைகட்டிய பயிர்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.
7)மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.காலை நேரத்தில் 20 நிமிடங்களுக்கு ஜாகிங் போக வேண்டும்.தங்களால் முடிந்த எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.