வங்கதேச அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் மூன்றாவது போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் அடித்ததின் மூலம் பல்வேறு வகையான சாதனையை செய்துள்ளார். குறிப்பாக விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார் மற்றும் சச்சின் சாதனையை சமன் செய்தும் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான அணி வங்கதேசத்துக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டியில் கொன்ற போட்டியில் விளையாடி வருகிறது இதன் மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி வேட்டை செய்ய தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 244 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானில் வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு எதிராக 2-1 என்ற விகிதத்தில் தொடரை வென்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ரகுமானுல்லா குர்பாஸ் 120 பந்துகளுக்கு 101 ரன் அடித்து அபார சதத்தை பதிவு செய்தார். இது இவரின் எட்டாவது சதமாகும்.
இதன் மூலம் 23 வயதுக்குள் எட்டு சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிகாக் ஆகியோருடன் சாதனையை பகிர்ந்து உள்ளார். 7 ஒரு நாள் போட்டி சதங்களை அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ரகுமானுல்லா குர்பாஸ்.