காதல் மனைவியை 8 துண்டுகளாக  வெட்டி   சூட்கேசில் அடைத்த கணவன்!! திருவண்ணாமலையை உலுக்கிய  கொடூர கொலை!!

0
109
The husband cut his love wife into 8 pieces and put her in a suitcase!! The brutal murder that shook Tiruvannamalai
The husband cut his love wife into 8 pieces and put her in a suitcase!! The brutal murder that shook Tiruvannamalai

crime: திருவண்ணாமலையில் கணவனே மனைவியை கொன்று  எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய  கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கூபுரத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார், மேலும் பைனான்ஸ்  ஒன்றை நடத்தி வருகிறார்.  கோபிக்கு  முன்னதாக திருமணம் நடந்து இருக்கிறது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இவ்விருவருக்கும் விவாகரத்து ஆனது.  பிறகு கோபி திருவண்ணாமலை மாவட்டம் அரசுடையான்பட்டு கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன் என்பவரது மகள் சரண்யா (29)  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும்  திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்  இவர்களது குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்து இருக்கிறது. கோபி, தன் மனைவி  சரண்யா மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சந்தேகம் முற்றிய நிலையில்  தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு இவ் விருவருக்கு வீட்டில் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு பிறகு சரண்யா மாயமாகி விட்டார்.

இவர்களின் பிள்ளைகள் தந்தையாகிய கோபியிடம் அம்மா (சரண்யா) எங்கே என கேட்டு இருக்கிறார்கள், அதற்கு     சரண்யாவின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக கூறி இருக்கிறார். இந்த  நிலையில்  சரண்யாவிடம் இருந்து எந்த  போன் கால்கள் எதுவும் வரவில்லை, போன் செய்தால்  அவரும் எடுக்க வில்லை இரண்டு நாட்களாக சுச் ஆப் என வருவதை அறிந்த சரண்யா அம்மா,  அவரை காண வீட்டிற்கு வந்து இருக்கிறார்.

பிள்ளைகளிடம் அம்மா  சரண்யா பற்றி கேட்ட பொது” அம்மா கோபித்து கொண்டு உங்களை காண வந்ததாக அப்பா கூறினார்” என்று தெரிவிக்க. சந்தேகம் அடைந்த சரண்யா அம்மா திருவண்ணாமலை காவல் நிலையத்தில்  தன் மகள் சரண்யா காணவில்லை எனப்  புகார் அளித்து இருக்கிறார்.

மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கோபி தனது மனைவி சரண்யாவை சண்டையில் அடித்த போது உயிரிழந்ததாகவும், சரண்யாவின் உடலை அப்புறப்படுத்துவதற்காக எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து   கிருஷ்ணகிரி மாவட்ட காட்டுப் பகுதியில் வீசிய கொடூரம் வெளியானது. சரண்யாவின் உடலை அப்புறப்படுத்துவதற்காக கோபியின் தாய் மற்றும் அவரது நண்பர் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleவிராட் கோலி சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர்!! சதத்தில் சரித்திர சாதனை
Next articleபுஷ்பா-2 படத்தின் டிரெய்லர் எப்போது!! படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!