திருவெற்றியூரில் சன்னதி தெருவில் சாலையோரமாக காய்கறி விற்பனை செய்து வரும் மாரி(55), மனைவி கௌரி(50) தம்பதியினர். நேற்று மாலை கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கெளரியை சரமாரியாக வெட்டியுள்ளார். அதை தடுக்க முயன்ற கனவையும் தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் அங்கு உள்ள மக்கள் அவனை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தது காவல்துறை ஆனால் கௌரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவன் மாரி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில் கெளரியையும், மாரியையும் வெட்டியது அதே பகுதியில் உள்ள சேகர் என்று தெரிய வந்தது. மேலும் சேகருக்கும் கெளரிக்கும் இடையே 10 நாட்களுக்கு முன்பே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கௌரி சேகர் இடத்தில் சிறுநீர் கூறி ஏற்பட்ட தகராறில் கௌரி சேகரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதை மனதில் வைத்து கொண்டு முன்விரோதம் காரணமாக சேகர் நேரம் பார்த்து திட்டமிட்டு இந்த கொடூர கொலையை செய்துள்ளார். இந்த செய்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.