வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பாருங்கள்!! நம்ப முடியாத அதிசயத்தை காண்பீர்!!

0
125
Try drinking hot water on an empty stomach
Try drinking hot water on an empty stomach

மனிதர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்று.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உறுப்புகள் செயல்பாடு முற்றிலும் சீர்குலையும்.இதனால் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தண்ணீரை அப்டியே குடிப்பதை விட சிறிது சூடுபடுத்தி குடித்தால் பல வகை நன்மைகள் கிடைக்கும்.பொதுவாக மழைக்காலங்களில் காய்ச்சல்,சளி,இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து காத்துக் கொள்ள தண்ணீரை சூடுபடுத்தி குடிப்போம்.தண்ணீர் மூலம் இந்த நோய் பாதிப்புகள் பரவுகிறது என்பதே காரணம்.

காய்ச்சல் வந்தால் மட்டும் சூடு நீர் குடிக்காமல் மற்ற நாட்களிலும் வெந்நீர் குடித்து வந்தால் பல வகை ஹெல்த் பிரச்சனைகள் சரியாகும்.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:

1)உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கும் நபர்கள் தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும்.வெந்நீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

2)கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.

3)வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ,மன அழுத்தம் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

4)சிறுநீரகம் சம்மந்தபட்ட தொந்தரவுகள் இருப்பவர்கள் வெந்நீர் குடிப்பது நல்லது.

5)சளி மற்றும் இருமல் பாதிப்பு இருந்தால் தண்ணீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டும்.தொண்டையில் உள்ள கிருமிகள் அழிய நெஞ்சு பகுதியில் உள்ள சளி கரைய வெந்நீர் உதவுகிறது.

6)மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்தால் கெட்டி மலக் கழிவுகள் இளகி வெளியேறிவிடும்.

7)உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வெந்நீர் குடிக்க வேண்டும்.நுரையீரல் செயல்பாடு மேம்பட வெந்நீர் குடிக்கலாம்.

Previous articleநெஞ்சு சளிக்கு மருந்து வேண்டாம்!! இந்த கஞ்சி செய்து குடிங்க.. 5 நிமிடத்தில் பலன் உண்டு!!
Next articleதமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!! நோயாளிகளின் நிலை என்ன!!