நம் அம்மா மற்றும் பாட்டியின் கூந்தலை விட இன்றைய இளம் வயது பெண்களின் கூந்தல் எலிவால் போன்று காட்சியளிக்கிறது.தலை முடியை விரித்து போடுவது தான் பேஷன் என்று இக்காலத்து பிள்ளைகள் நினைத்து கொள்கிறார்கள்.
இதனால் தலை முடி உதிர்வு அதிகளவு ஏற்படுகிறது.முடி வெடிப்பு,தலை முடியின் நிறம் மாறுதல் போன்றவை ஏற்படக் காரணமாகிறது.இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு தலைக்கு எண்ணெய் வைப்பதை அலர்ஜியாக நினைக்கிறார்கள்.தலைக்கு எண்ணெய் வைத்தால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்.
தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த கூந்தலுக்கு எண்ணெய் வைக்க வேண்டும்.இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.பிறகு கூந்தலை பின்னலிட வேண்டும்.இவ்வாறு செய்வதால் தலை கூந்தலின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.இதனால் முடி வறட்சியாவது தடுக்கப்படுகிறது.
இரவு நேரத்தில் தலையில் சீப்பு வைத்து அழுத்தம் கொடுத்து சீவினால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்து பின்னலிட்டு உறங்கும் பொழுது முடி சேதம் தடுக்கப்படுகிறது.
கூந்தலை விரித்து வைத்து உறங்கினால் பொடுகு,முடி உதிர்வு போன்றவற்றை அனுபவிக்க நேரிடும்.இரவில் எண்ணெய் வைத்து கூந்தலை பின்னுவதால் அவை பளபளப்பாக மாறுகிறது.தலை முடியை விரித்து வைப்பதால் தூசி,அழுக்கு போன்றவை படிந்து முடி சேதமடையும்.எனவே இரவில் தலைக்கு எண்ணெய் வைத்து பின்னலிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.