பெண்கள் பலரும் இடுப்பு வலியால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அதிகம் வேலை செய்வதாலும்,வயது மூப்பின் காரணமாகவும் இந்த இடுப்பு வலி பாதிப்பு உண்டாகிறது.இதை சரி செய்ய உளுந்து மற்றும் ராகியில் கஞ்சி செய்து பருகி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு உளுந்து பருப்பு – கால் கப்
2)ராகி – கால் கப்
3)ஏலக்காய் – இரண்டு
4)சுக்கு – ஒரு துண்டு
5)தேங்காய் துருவல் – 1/4 கப்
6)வெல்லம் – 1/4 கப்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கப் கருப்பு உளுந்து பருப்பு சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அடுத்து அதில் கால் கப் ராகி சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.இவற்றையும் நன்கு ஆறவிட்டு உளுந்து மற்றும் ராகியை தனித் தனியாக மிக்சர் ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த கருப்பு உளுந்து பொடி மற்றும் ராகிப் பொடியை ஒன்றாக கரைத்து சூடாக்க கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்த்து கரண்டி கொண்டு கலந்து விடவும்.
அடுத்து மிக்சர் ஜாரில் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு ஏலக்காயை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை கொதித்து கொண்டிருக்கும் கஞ்சியில் சேர்த்து கிண்டவும்.
அடுத்து அரை கப் வெல்லத்தை தூள் சேர்த்து கஞ்சியில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.இறுதியாக கால் கப் அளவிற்கு துருவிய தேங்காயை அதில் சேர்த்து கிண்டி இறக்கவும்.அவ்வளவு தான் கை,கால்,இடுப்பு வலியை துரத்தி அடிக்கும் சத்தான கஞ்சி தயார்.