இந்த திமுக ஆட்சியில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை!! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!!

0
117
In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!
In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!

இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் ஆசிரியை பள்ளியில் புகுந்து வெட்டி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.

கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 3 பேரையும் கம்பி அல்லது கட்டையால் தாக்கியிருக்காலம் என கூறப்பட்டது. இந்த செய்தியை கேட்டு அதிரிச்சியை ஏற்படுத்தியது என எடப்பாடி பழனிசாமி கூறினார். திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?” என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.

தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

Previous articleWhatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புதிய மற்றும் அசத்தலான அப்டேட்!!
Next article கொண்டாட்டத்தில் டெல்லி அணி நிர்வாகம்!! பேட்டிங் ல் பொளந்து கட்டும் புதிய வீரர்!!