உயிரை கொல்லும் நோய்களில் டாப் இடத்தில் இருப்பது புற்றுநோய்(கேன்சர்).கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது கேன்சர் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.கேன்சருக்கு பல சிகிச்சை முறைகள் இருப்பினும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட வில்லை என்றால் நிச்சயம் இறப்பு ஏற்படும்.
எனவே புற்றுநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள பானத்தை பருகுவதன் மூலம் அதன் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டு விடமுடியும்.
தேவையான பொருட்கள்:
1)தக்காளி
2)கேரட்
3)எலுமிச்சம் பழம்
4)கொத்தமல்லி தழை
5)தேன்
6)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:
முதலில் இரண்டு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் பாதி எலுமிச்சையின் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழையை தண்ணீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மிக்சர் ஜாரை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி,கேரட்,எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து பருகுங்கள்.
இந்த பானத்தை தொடர்ந்து இரண்டு வாரங்கள் பருகி வந்தால் உடலில் உள்ள கேன்சர் செல்கள் முற்றிலும் அழிந்துவிடும்.