கை கால் வலியை குறைக்கும் முருங்கை பசை!! ஜட்ஸ் 2 பொருளில் உடனடி தீர்வு!!

0
102
Moringa paste that relieves hand and foot pain!! Instant Solution on Judts 2 Item!!
Moringa paste that relieves hand and foot pain!! Instant Solution on Judts 2 Item!!

அனைவருக்கும் கை,கால் வலி ஏற்படுத்துவது பொதுவான ஒரு பாதிப்பாக உள்ளது.கடிமான வேலைகளை செய்வது,வயது முதுமை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் கை மற்றும் கால்களில் வலி ஏற்படுகிறது.

இந்த வலியை குறைக்க விளக்கெண்ணெய் மற்றும் முருங்கை இலையை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)விளக்கெண்ணெய் – 50 மில்லி

2)முருங்கை கீரை – கால் கைப்பிடி

செய்முறை விளக்கம்:

முதலில் கால் கைப்பிடி அளவு முருங்கை கீரையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 50 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அடுத்து அரைத்து வைத்துள்ள முருங்கை இலை பேஸ்டை விளக்கெண்ணெயில் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.

இந்த முருங்கை இலை பேஸ்டை கை,கால் வலி ஏற்றப்பட்டுள்ள இடத்தில் பூசி வந்தால் வலி,வீக்கம் குறையும்.

கை,கால் வலிக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

1)முருங்கை இலை – கால் கைப்பிடி அளவு

2)விளக்கெண்ணெய் – 25 மில்லி

செய்முறை விளக்கம்:

அடுப்பில் வாணலி வைத்து 25 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் முருங்கை இலை போட்டு கொதிக்க வைக்கவும்.

இதை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி கை மற்றும் கால் வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)விளக்கெண்ணெய் – 25 மில்லி

2)பிரண்டை இலை – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

கால் கைப்பிடி அளவு பிரண்டை இலை பறித்துக் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 25 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பிரண்டை இலை போட்டு காய்ச்சி ஆறவிட்டு கை,கால் வலி மீது தடவி வந்தால் வீக்கம் குறையும்.

Previous articleதினந்தோறும் 5 முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரிந்தால் இதை விடவே மாட்டிர்கள்!!
Next articleகண் இமைகள் அடர்த்தியாக வளர.. இரவில் இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!