சிவப்பு அவலை உங்கள் உணவுடன் சேர்த்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு கேன்சர் பாதிப்பு இருக்காது!!

அரிசியை விட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அவல் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.வெள்ளை மற்றும் சிவப்பு அவல் என இரு வகைகள் உண்டு.இதில் சிவப்பு அவல் கூடுதல் சத்துக்களை கொண்டுள்ளது.

உடல் எடையை குறைக்க,இரத்த சார்கரை அளவை கட்டுக்குள் வைக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க சிவப்பு அவல் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)சிவப்பு அவல் – இரண்டு கப்
2)உளுந்து பருப்பு – கால் கப்
3)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் சிவப்பு அவல் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் கால் கப் வெள்ளை உளுந்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு நன்கு ஊறவிட வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.பிறகு இதை தட்டு போட்டு மூடி நன்கு புளிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த மாவில் இட்லி,தோசை செய்து சாப்பிடலாம்.சிவப்பு அவலை இவ்வாறும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

1)சிவப்பு அவல் – 1/4 கப்
2)தேங்காய் துருவல் – 1/2 கப்
3)நாட்டு வெல்லம் – கால் கப்

செய்முறை விளக்கம்:

ஒரு கிண்ணத்தில் கால் கப் அளவிற்கு சிவப்பு அவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

அவல் நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடித்துவிடவும்.பிறகு அரை கப் அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்து அதில் கால் கப் அளவிற்கு நாட்டு வெல்லத் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளருவது தடுக்கப்படும்.