America: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதியை பக்கத்துக்கு அறையில் இருந்து கொண்டே கர்ப்பமாக்கிய ஆண் கைதி.
அமெரிக்காவில் 2022 ம் ஆண்டு கொலை குற்றம் காரணமாக டெய்சி லிங்க் என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் எந்த ஆண்களையும் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் இவர் கடந்த ஜூலை மாதம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். யாரையும் சந்திக்காத நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது.
இதற்கு காரணம் அதே சிறையில் உள்ள 24 வயதான ஜோன் டெபாஸ் என்ற கைதிதான் என கூறப்படுகிறது. இவர்களுக்குள் குழந்தை பிறந்த ஒரு செயல் அதிர்ச்சியான ஒன்றாகவே உள்ளது. இருவரும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை.
ஆனால் இருவரையும் இணைக்கும் ஒரு ஏர் கண்டிஷனிங் வென்ட் ஒன்று உள்ளது. இந்த வென்ட் மூலம் பேசும் போது இருவருக்கும் நன்றாக கேட்கும் அதன் மூலம் இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். ஒரு முறை வென்ட் மூலமாக பேசும்போது டெபாஸ் தான் தந்தை ஆக வேண்டும் என்று உருக்கமாக கூறியுள்ளார். இருவரும் இதற்கு திட்டம் ஒன்றை போட்டுள்ளனர்.
அந்த திட்டமானது டெபாஸ் அறையிலிருந்து வென்ட் மூலம் ஒரு பொருளை போடும்போது அது டெய்சி அறையில் விழும். இதை பயன்படுத்தி டெபாஸ் விந்தணுக்களை அனுப்பியுள்ளார். அதனை டெய்சி தனது பெண்ணுறுப்பில் செலுத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்து வந்த நிலையில் கருவுற்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனை மருத்துவர்கள் இதுபோன்ற ஒரு சம்பவத்தை கேள்வி பட்டதில்லை ஆனால் மருத்துவ ரீதியாக இதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளது.