Uttar Pradesh: ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான மனைவி குழந்தைகள் கண் முன்னே கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம்,மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அவருக்கும் சீமா என்பவருடன் திருமணம் ஆகி இறுக்கியது. இவ் இரு தம்பதிக்கும் வன்ஷிகா, அன்ஷிகா, பிரியான்ஷ் என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் ராஜூ மற்றும் சீமா இருவருக்கும் திருமணம் முடிந்த நாள் முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
மேலும், சீமாவின் நடத்தை மீது ராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை கண்காணித்து வந்து இருக்கிறார். இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுவதில் அதிகம் நாட்டம் கொண்டு இருப்பவராக சீமா இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சீமா பதிவிட்ட ரீல்ஸ் வைரலாகி இருக்கிறது. இதனால் அவருக்கு புது புது தொலைபேசி எண்களில் இருந்து அவருக்கு போன் அழைப்புகள் வந்திருக்கிறது.
இதனை கண்டு ஆத்திரம் அடைந்த கணவர் ராஜூ சம்பவத்தன்று இரவு சீமா விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வாக்குவாதம் இறுதியில் கை கலப்பாக மாறி இருக்கிறது அப்போது அருகில் இருந்த செங்கலை எடுத்து ராஜூ தன் மனைவி சீமா தலையில் தாக்கி இருக்கிறார். அதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்து இருக்கிறார்.
இந்த சத்தத்தை கேட்டு எழுந்த குழந்தைகள் கண்முன்னே கத்தியால் மனையின் தலையை அறுத்து கொலை செய்து தப்பி ஓடி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.