அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சின்னப்பா மற்றும் பச்சையம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் எனும் மகனும் பானுபிரியா எனும் மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். பானுப்ரியா அருகில் தாமரைக்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் மகள் பானுபிரியா இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சின்னப்பா வழக்கம் போல் நேற்று முன் தினம் மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மகள் மற்றும் மனைவி இருவரும் பயத்தில் பக்கத்து வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி வாக்குமூலம் அளித்தார்.
நான் மிகவும் ஆத்திரமடைந்தேன் இதனால் நான் அதிகாலை 3 மணி அளவில் என் வீட்டிற்கு சென்று அவர் தலையில் சரமாரியாக தாக்கினேன். அவர் உடனே மயங்கினார் அவர் எழுந்தால் எனக்கு ஆபத்து என அவர் கை கால்களை அறுத்து துண்டித்தேன். மேலும் ஆத்திரம் தாளாமல் அவரின் ஆண்குறியை அறுத்து கொடூரமாக கொலை செய்தேன் என அவர் கூறினார். இதனால் மனைவி பச்சையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அரியலூர் மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது.