Kanyakumari : மனைவி மனைவி மீது ஏற்பட்டு வந்த சந்தேகத்தின் பெயரில் துண்டு துண்டாக வெட்டி பேக்கில் பார்சல் செய்த கணவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து இவரின் மனைவி மரியா சந்தியா இவர் நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாரிமுத்து மரியா சந்தியா தம்பதியினர் அஞ்சு கிராமத்தில் உள்ள பால் குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் மாரிமுத்து ஆடு வெட்டும் வேலைக்கு கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இருவருக்கும் நீண்ட நாட்களாக மனைவி மரிய சந்தியாவின் மீது சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சந்தேகத்தின் காரணமாக இருவரின் இடையே அடிக்கடி சண்டை வருவதும் சொந்த வீட்டுக்கு செல்வதுமாக அடிக்கடி இந்த சண்டை விவகாரம் வந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சண்டை பெரிதாகி அவர் சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மாரிமுத்து மனைவி தீர்த்த கட்ட முடிவு செய்துள்ளார். அலைபேசியில் தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். மாரிமுத்து நேற்று மதியம் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் ஒரு கட்டத்திற்கு அறையை பூட்டி விட்டு டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி உள்ளார் அப்போது சத்தம் கேட்ட போது அக்கம் பக்கத்தில் வந்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் வீட்டில் ஆணி அடிப்பதாக கூறியுள்ளார்.
பிறகு உடல் பாகங்களை வெட்டி துண்டு துண்டாக பேக்கில் பேக் செய்து இழுத்துச் சென்றுள்ளார். அருகில் நாய் ரத்த வாடை க்கு பின் சென்றுள்ளது கவ்வி பேக்கை இழுத்ததும் மக்களுக்கு சந்தேகம் வந்து கேட்டுள்ளனர் அப்போது அவர் பைகளில் மாட்டிறைச்சி உள்ளதாக கூறியுள்ளார். சந்தேகத்தில் பார்த்தபொழுது மரியா சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அதை எடுத்து போலீசில் தகவல் அறிந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.