ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
இக்காலத்தில் ஆண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு செல்கின்றனர்.சிலர் இதை தொடர்ந்து கடைபிடிக்க சிரமப்படுகின்றனர்.ஆனால் ஜிம்மிற்கு செல்லாமலே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட டிப்ஸில் ஒன்றை பின்பற்றுங்கள்.
டிப்ஸ் 01:
தினமும் ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.பாலில் சர்க்கரை போன்ற எந்த ஒரு இனிப்பும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
டிப்ஸ் 02:
தினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைக்கட்டிய பச்சை பயறு,ராகி,கம்பு போன்ற சிறு தானியங்களை உட்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ் 03:
தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டையை வேக வைத்து சாப்பிட வேண்டும்.தினம் ஒரு முட்டை உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
டிப்ஸ் 04:
இனிப்பு நிறைந்த உணவுகள்,கூல் ட்ரிங்க்ஸ்,எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
டிப்ஸ் 05:
அசைவ உணவுகளை ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.புரோட்டீன் நிறைந்த பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ் 06:
பாதாம்,முந்திரி,வால்நட்,சுண்டல் போன்ற உலர் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
டிப்ஸ் 07:
பச்சை இலை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ் 08:
கடல் மீன்களை டயட்டில் சேர்த்துக் கொண்டால் சிக்ஸ் பேக் வைக்க உதவியாக இருக்கும்.தினமும் காலையில் ஓட்ஸை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
டிப்ஸ் 09:
தினசரி டயட்டில் வேர்க்கடலை வெண்ணையை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கும்.
டிப்ஸ் 10:
பால் பொருட்களான சீஸ்,தயிர் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.அதேபோல் பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதில் உள்ள கனிம சத்துக்கள்,வைட்டமின்கள் சிக்ஸ் பேக்கிற்கு உதவும்.