வின்டர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த.. இந்த ட்ரிங்க் செய்து பருகுங்கள்!!

Photo of author

By Divya

வின்டர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த.. இந்த ட்ரிங்க் செய்து பருகுங்கள்!!

குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல் போன்ற தொற்றுகள் அதிகளவு ஏற்படுகிறது.இதில் இருந்து மீள சுக்கு,கொத்தமல்லி,மிளகு,ஓமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் செய்து பருகலாம்.

தேவைப்படும் பொருட்கள்

1)சுக்கு – ஒரு பின்ச்
2)வர கொத்தமல்லி – ஒரு டேபுள் ஸ்பூன்
3)மிளகு – கால் டேபுள் ஸ்பூன்
4)ஜீரா – அரை டேபுள் ஸ்பூன்
5)ஓமம் – அரை டேபுள் ஸ்பூன்
6)மஞ்சள் கிழங்கு தூள் – ஒரு பின்ச்

செய்முறை

படி 01:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் மஞ்சளை தவிர மற்ற ஒவ்வொன்றையும் தனித் தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

படி 02:

வறுத்த சுக்கின் தோல் மட்டும் நீக்கிவிட வேண்டும்.பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சிறிது சூடாகும் வரை காத்திருக்க வேண்டும்.

படி 04:

பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை கொட்டி மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

படி 05:

கலவை நன்கு கொதித்து வந்ததும் இறுதியில் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

படி 06:

அடுத்து இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சூடாக பருக வேண்டும்.இதை தினமும் பருகி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இந்த பானத்தில் பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகளை இந்த பானம் பருகி குணப்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல் இந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.