நம் கிராமபுறங்களில் காணப்படும் பெயர் தெரியாத கீரைகளில் ஒன்று தான் பிண்ணாக்கு கீரை.மஞ்சள் நிற பூக்கள் மற்றும் சிவப்பு நிறத் தண்டை கொண்டிருக்கும் இந்த கீரை பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது.
இந்த கீரை விஷக்கடியை குணப்படுத்த உதவுகிறது.பிண்ணாக்கு கீரையை அரைத்து சாறு எடுத்து பருகினால் விஷக்கடி முறியும்.கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் பிண்ணாக்கு கீரையை அரைத்து கஷாயம் செய்து பருகலாம்.இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.
வயிறு மற்றும் குடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அனைத்தையும் இந்த கீரை சாறு வெளியேற்றிவிடும்.மூல நோய் உள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
மலச்சிக்கல் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் பிண்ணாக்கு கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் மருந்தாக இந்த கீரை பயன்படுகிறது.வாயுத் தொந்தரவு இருப்பவர்கள் பிண்ணாக்கு கீரையை பொடித்து வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் பிண்ணாக்கு கீரையின் சாறை பருகி வரலாம்.ஆண்மை குறைபாடு,மலட்டுத் தன்மை,விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியக் குறிப்பு மூலம் தீர்வை எட்டலாம்.
தேவையானவை:
1)பிண்ணாக்கு கீரை
2)அமுக்கிரா கிழங்கு
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கைப்பிடி பிண்ணாக்கு கீரையை வெயிலில் நன்றாக காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் சிறிது அமுக்கிரா கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.நாட்டு மருந்து கடையில் அமுக்கிரா கிழங்கு பொடி கிடைக்கும் அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
இப்பொழுது பிண்ணாக்கு கீரை பொடி மற்றும் அமுக்கிரா கிழங்கு பொடியை ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் ஆண்மை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.