தொப்புள் கொடியில் கூட பிளாஸ்டிக்!! மறதியை ஏற்படுத்துமா!!

Photo of author

By Gayathri

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலை பிளாஸ்டிக் குறித்த ஒரு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி மிக நுண்ணிய வழிவான பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலை அதிகமாக பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் மனித உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் கருசுமக்கும் தாய்மார்களின் தொப்புள் கொடியிலும் கூட கலந்துள்ளது என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளார்.

1997 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வெவ்வேறு வயதில் 12 க்கும் மேற்பட்டோர் மீது உடல்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களுல் சிலவர்களின் ரத்தத்திலும், சிறுநீரகம், கல்லீரல், ரத்தம் விந்தணுக்களில் கூட பிளாஸ்டிக்கின் நுண்ணிய துகள்கள் காணப்பட்டுள்ளது. தாய்மார்களின் தாய்ப்பாலிலும், தொப்புள் கொடியிலும் கூட பெரும்பாலும் காணப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பலருக்கும் திடுக்கிடும் தகவல்களை தந்துள்ளது. பொதுவாக 5 மில்லி மீட்டருக்கும் குறைவான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை நுண் நெகிழிகள் என்று கூறப்படுகின்றது.

இதில் பால் பாக்கெட் கட் செய்யும் முதல் மசாலா பொருட்கள் போன்ற பாக்கெட்கள் கட் செய்யும் சிறிய பிளாஸ்டிக் போன்ற துகள்களால் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை மிக அதிகமாக மாசுபடுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தனி நபர்களின் முயற்சியால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த இயலும். அனைவரும் இணைந்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம். முடிந்தளவு கைகளை எடுத்துச் செல்வோம் கடைகளுக்கு என்று எடுத்துரைத்துள்ளார்.