”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் வேலையை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனையை எழுப்புகின்றனர்.
தமிழ்நாடு அரசுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்குத் தைரியம் இல்லை. இதை உங்களால் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும். அப்போது, தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்.
ஆயிரக்கணக்கான கிமீ தொலைவில் உள்ள மொழிகளை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், இந்தியாவின் மொழி உங்களுக்கு பிடிக்காது. வேறு எந்த இந்திய மொழியுடனும் இந்திக்குப் போட்டி இல்லை. இந்தி மொழி அனைத்து மொழிகளுக்கும் நண்பன். அந்நிய மொழியை கற்க முக்கியத்துவத்துவம் அளிக்கும் தமிழக அரசு, இந்திய மொழியை கற்ற முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது” என்றார்.