நமது உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.உடற்பயிற்சி உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.இன்று நடிகர்,நடிகைகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இதற்காக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சிலர் ஜிமிலேயே நாள் முழுவதும் நேரத்தை செலவிடுகின்றனர்.சிலர் கடுமையான எடை தூக்குதல் பயிற்சியை செய்கின்றனர்.ஆனால் அதீத உடற்பயிற்சி ஆபத்தை உண்டாக்கிவிடும்.
அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு உண்டாகும்.அதிக உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்துவிடும்.நீண்ட நேரம் ஜிம் பயிற்சி செய்தால் உடல் செயல்திறன் குறைந்துவிடும்.நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் உடலில் காயங்கள்,வீக்கங்கள் ஏற்படும்.
முதுகு வலி,பக்கவாதம்,மாரடைப்பு,மூட்டு வலி,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதிக
நேரம் ஜிம் பயிற்சி செய்தால் மன அழுத்தம் உண்டாகும்.மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மச் னசோர்வு,மன வலி,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்..இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள் அதிக நேரம் ஜிம் பயிற்சி செய்தால் மாரடைப்பு,ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அதிக நேர ஜிம் பயிற்சி இதயத் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.அதிக எடை தூக்கி ஜிம் பயிற்சி மேற்கொண்டால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.ஜிம் பயிற்சி நல்லது என்றாலும் அதை அதிக நேரம் செய்வது உடல் ஆரோக்கியத்தை ஆபத்தாக மாறிவிடும்.எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி மட்டும் ஜிம் பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
அதேபோல் சிலர் சீக்கிரம் கட்டுடல் பெற விரும்பி முட்டை,அசைவம் போன்ற புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.புரதச்சத்து வேண்டும் என்பதற்காக அதிக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.
எனவே ஜிம்க்கு செல்பவர்கள் உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை பழக்கத்தை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.