தற்போது வரை அஜித் குமார் மரணத்தில் சம்பந்தபட்ட நிகிதா விசாரணை வட்டத்திற்குள் வராத காரணத்தால் அவர் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. கடமைக்காவது கைது பண்ணி விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் கூலாக பேட்டி கொடுக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் நிகிதா என்கிற கல்லூரி பேராசிரியையின் 10 பவுன் நகையை திருடி விட்டதாக சொல்லி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்று எந்த வித வழக்கும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி கொலை செய்தனர்.
இதில் சம்மந்தப்பட்ட 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கை CBI க்கு மாற்றிவிட்டனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சந்தேகத்திற்கு உரிய வகையில் செயல்பட்ட நிகிதாவை இதுவரை யாரும் கைது செய்யவில்லை.
உண்மையில் நகை தான் காணாமல் போனதா, இல்லை அஜித் மீது இருந்த முன்விரோத பகை காரணமாக நகை காணாமல் போய்விட்டதாக சொல்லி அஜித்தை பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் என்று நிகிதா செயல்பட்டாரா என்கிற கோணத்தில் இதுவரை காவல்துறையினர் விசாரிக்கவே இல்லை. ஊடகங்களில் சொல்லப்படும் நிகிதாவிற்கு உதவிய அந்த தலைமை செயலக அதிகாரி யார் என்றும் இதுவரை யாரும் விசாரிக்கவில்லை.
அஜித்குமார் இறப்பில் இருந்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த நிகிதா இப்போது ரொம்ப கூலாக அமர்ந்து நியூஸ் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார். ஒரு வேலை நிகிதாவை காவல் துறையினர் தேடிவருவது உண்மை என்ற போதிலும் காவல்துறையின் கையில் சிக்காத நிகிதாவை எப்படி ஊடக நிருபர்கள் சந்தித்து பேட்டி எடுக்க முடியும்.
நிகிதாவை காவல்துறையினர் கடைசி வரை விசாரிக்கவே இல்லையோ என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் அரசு கல்லூரிக்கு சென்று அனைவரையும் சந்தித்து விட்டு மீண்டும் தனது விடுமுறையை இன்னும் 20 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டி விண்ணப்பித்து விட்டு வந்திருக்கிறார் நிகிதா. நிகிதாவை கல்லூரியில் பார்த்த பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.