முதல்வரே நீங்கா ஒழுங்கா.. எம்எல்ஏ வின் பகிரங்க கேள்வி!! பொங்கிய தவெக!

தமிழக அரசியலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு தவெக ஐடி விங்க் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி பெண் அதிகாரி தொடர்பான புகாரில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யவே 116 நாட்கள் ஆகியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், ஜூலை 31-ம் தேதியே புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை முதலமைச்சர் விஜய் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட எம்எல்ஏவிடம் முதலமைச்சர் விசாரித்தால், அவரே திருப்பி முதலமைச்சரைப் பார்த்து ‘நீங்கள் மட்டும் ஒழுங்கா?’ என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம் இருக்கலாம் என உதயநிதி விமர்சித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங்க் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. புகார் அளிக்கப்பட்ட தேதியில் முரண்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அக்டோபர் 22, 2026 தேதியிட்ட புகார் கடிதம் குறித்த செய்தி வெளியாகியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாக உதயநிதி கூறுவது ஏன் என்றும் அத்துடன், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது உதயநிதிக்குத் தெரியுமா என்றும் தவெக ஐடி விங்க் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏற்கெனவே தமிழக அரசியல் களம் பல்வேறு விவாதங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது உதயநிதி மற்றும் தவெக இடையிலான இந்த நேரடி வார்த்தைப் போர் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.