திருப்பரங்குன்றத்தில் தீபம்: உச்சநீதிமன்ற உத்தரவையும் ஏற்க முடியாது!! தவெக அரசுக்கு வந்த புதிய தலைவலி!

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கூடாது அது வெறும் தூண் தான் என தவெக பல விவாதங்களை முன் வைத்த நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது என்றும், இந்தத் தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், வடமாநிலங்களில் மத மோதல்களை ஏற்படுத்தியதைப் போல தமிழகத்திலும் சில அமைப்புகள் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் ஒரு மத வழிபாட்டு நிகழ்வைச் சுற்றியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமைதான். நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுதானே நிர்வாகத்தின் பொறுப்மும் ஆகும்.ஆனால் அதனை எதிர்ப்பது பல சிக்கல்களுக்குள் தாங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதித்துள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக தவெக ஆட்சியில் இந்த விவகாரம் கையாளப்படும் விதம் இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் கவனத்திற்கு எதிராக திரும்புவதாக தெரிகிறது.

தீபம் ஏற்றுவது மத மோதலுக்கான விவகாரமா? அல்லது பக்தர்களின் வழிபாட்டு உரிமையா? நீதிமன்ற உத்தரவை மதித்து அமைதியான முறையில் தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது ஆன்மிகப் பிரச்சினையைத் தாண்டி தவெக அரசுக்கு அரசியல் ரீதியான சவாலாகவும் மாறியுள்ளது!