ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று மட்டும் அங்கு 549 பேருக்கு புதிதாகக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் மெல்பர்ன் நகரில் முடக்கம் நடப்பிலிருந்தாலும் நோய்ப்பரவல் குறைந்ததாகத் தெரியவில்லை. மெல்பர்னில் இரண்டாம் கட்ட கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
கடந்த மூன்று வாரமாக ஆஸ்திரேலியாவில் கிருமிப்பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாள்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் அடையாளம் காணப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 15,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 161 பேர் மாண்டனர்.