பிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

0
138
Malaysia's Prime Minister Najib Razak walks to the parliament house before a session in Kuala Lumpur, Malaysia, Wednesday, March 28, 2018. Embattled Najib is expected to seek parliamentary approval Wednesday for the new voting maps which critics said will worsen inequality among the constituencies and etch them based on racial lines. (AP Photo/Sadiq Asyraf)

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, 1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 210 மில்லியன் ரிங்கிட் இந்திய மதிப்பில் சுமார் 370 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. 1MDB முதலீட்டு நிதியிலிருந்து அவரது சொந்த வங்கிக் கணக்குக்கு 10 மில்லியன் டாலர் தொகை மாற்றிவிடப்பட்டது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகப் பல்வேறு நபர்களிடம் 1MDB முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். அதனையடுத்து முதல் ஊழல் வழக்கில் நஜிப் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

Previous articleபிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன
Next articleராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?