செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

Photo of author

By Parthipan K

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.