‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்!

0
67

‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்பது ஒரு ஐயம் ஆகவே உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து படிப்பு துறையிலும் புதிய மாற்றங்களை மத்திய அரசு மாற்றியுள்ளது.

பல கட்சித் தலைவர்களும்,நடிகர்களும் மற்றும் பலர் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து மற்றும் எதிர்த்தும் மாறி மாறி தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்

இது மாணவர்களுக்கு பயன்படுமா?

நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது அதற்கு பதிலாக இந்தக் கல்வி கொள்கையில் இப்பொழுது 5+3+3+4 கல்வி முறை அமல் படுத்த வருகிறது.

இதைப் பற்றி மத்திய அரசு விளக்கமாக கூறுவதாவது

அதன்படி முதல் 5 வருடம் (அங்கன்வாடி மற்றும் பிரீ ஸ்கூல் ஆகியவற்றையும் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் ஐந்தாம் வகுப்பு வரை மூன்று ஆண்டுகள், எட்டாம் வகுப்பு வரை மூன்று ஆண்டுகள், பன்னிரண்டாம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

அப்படி என்றால் 3-8, 8-11,11-14,14-18 வயது வரை இந்த புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்படுகிறது.10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அனைத்து  வகுப்புகளும் முழுமையாக கற்க வேண்டும் என்பதை இதனுடைய நோக்கம்.

மொத்தம் நான்கு நிலை உள்ளது அவை பின்வருமாறு,

1. அடிப்படை நிலை

இந்நிலையில் அங்கன்வாடியில் இருந்து பிரீ ஸ்கூல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் எடுக்கப்படும். இதில் பல்வேறு பண்புகள் நீதிமுறை விளக்கங்கள் விளையாட்டுகள் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை நோக்கி செயல்படுதல் போன்ற அனைத்து பாடப்பிரிவுகளும் எடுக்கப்படும்.

2 தயாரிப்பு நிலை

மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை கணிதம் அறிவியல் கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் நடத்தப்படும்.

3. மத்திய நிலை

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இது முறையான அறிவிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு பின் அமல்படுத்தப்படும்.

4. இரண்டாம் நிலை

இதில் இரண்டு நிலைகள் உள்ளன .முதல் நிலை 9 ,10 வகுப்புகளும் ,இரண்டாம் நிலை 11 ,12 வகுப்புகளும் இந்த நிலையில்  இதில் அனைத்து ஆழமான பண்புகளும் கணிதமும் அறிவியலும் தொழில் படிப்புகளும் திறமையை வளர்க்கும் கல்வி முறையும் அமல்படுத்தப்படும்.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டும்  தேர்வுகள் நடத்துவதை எளிதாக்கி ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படும். திறமையை சார்ந்து 5+3+3+4 என அனைத்து கட்டத்திலும் நான்கு தேர்வுகள் ஆக நடக்கும்.

10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை அது தொடர்ந்து நடைபெறும்.

இதுவே புதிய கல்வி கொள்கை ஆகும் மத்திய அரசு இந்த கல்விக் கொள்கையை விரைவில் அமல் படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது மாணவர்களுக்கு பயன்படுமா? இல்லை மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை உண்டாக்குமா?

author avatar
Kowsalya