புளோரிடாவில் உள்ள ஒருவர், அமெரிக்காவில் பொது முடக்கத்தால் போராடும் வணிகங்களை மீட்டெடுக்க, கோவிட் -19 நிவாரண நிதியாக சுமார் நான்கு மில்லியன் டாலர்களைப் பெற்றார். அவர் தனது ஆடம்பர செலவுகளுக்காக அதை தவறாகப் பயன்படுத்தி, லம்போர்கினி ஹுராக்கன் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியுள்ளார்.
டேவிட் ஹைன்ஸ் என அடையாளம் காணப்பட்ட 29 வயதான இந்த நபர் மியாமி கடற்கரை ரிசார்ட்டில் ஆடம்பரமாக தங்கியிருப்பதற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்தினார் என்பதும் தெரியவந்தது.
“புளோரிடாவில் இந்த நபர் கைது செய்யப்பட்டு, 3.9 மில்லியன் டாலர்களை மோசடி செய்த முறையில், சம்பள பாதுகாப்பு திட்டம் (பிபிபி) என பணத்தினை பெற்றதாகவும், அந்த நிதியை வைத்து, ஒரு ஸ்போர்ட்ஸ் காரை தனக்காக வாங்குவதற்காகவும் பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டார். அதிகாரிகள் 318,000 டாலர் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் காரையும் (இந்திய ரூபாய் மதிப்பில் 22 கோடி), வங்கிக் கணக்குகளில் இருந்து 3.4 மில்லியன் டாலரையும் பறிமுதல் செய்தனர்.
புளோரிடாவில் உள்ள அமெரிக்க தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தி, டேவிட் ஹைன்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்தனர்.