டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

0
182
16 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான தாமஸ் மற்றும் பெண்களுக்கான  உபேர் போட்டிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டதால் தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். முதலிடம் வகிக்கும் இந்தோனேஷியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய ஆண்கள் அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கிறது.  பெண்கள் பிரிவில் ஜப்பான் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
Previous articleகாவு வாங்கும் கரோனா வைரஸ்! எதிர்க்கட்சித் தலைவரையும் விட்டுவைக்கவில்லை
Next articleநடுத்தர மக்களும் குறைந்த செலவில் மருத்துவ ஆலோசனையை ஊடகங்கள் வழியாகவே பெறலாம்:!! அரசின் புதிய திட்டம்?