ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் டிரம்ப் அமெரிக்காவில் குடியுரிமை வங்காமல், பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். மத்திய முகமைகள் ஒப்பந்த அடிப்படையில், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கும் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதை செய்யக் கூடாது. 2020 இறுதி வரை ஹெச்.1 பி விசா மற்றும் இதர வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படாது என்று ஜுன் 23 ஆம் தேதி அறிவித்த நிலையில், புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளார்.