ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும்

0
219

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டித் தொடர் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க இருக்கிறது.

பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ்வாடியா கருத்து தெரிவிக்கையில், ‘அணியின் உரிமையாளர்களான எங்களுக்கு ஐ.பி.எல். போட்டி நடக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பாதுகாப்பு குறித்து தான் நாங்கள் அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். இந்த தொடரின் போது சம்பந்தப்பட்ட யாராவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும் என்று கூறினார்.

Previous articleமாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?
Next articleதனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டுவிட்டது!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here