வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

0
116

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு கால்நடைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு  நடத்தினார்கள். திடீரென நடந்த இந்த தாக்குதலால் பதறிப்போன மக்கள் வெளியே செல்ல முயன்றனர். ஆனால் ஒருவரையும் வெளியே செல்ல விடாமல் சுட்டுத்தள்ளினர்.  இந்த துப்பாக்கிசூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என்று இதுவரை எந்த ஒரு இயக்கமும் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது.

Previous articleமது விற்பனையில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு வருமானமா ?
Next articleநாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்