Uncategorized

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் பற்றி கருத்து ஒன்று தெரிவிக்க அடுத்த நாளே பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக வின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.உடனே மு.க.ஸ்டாலின் முரசொலி அலுவகம் பஞ்சமி நிலம் இல்லை என்று கூறி 1985 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டு ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவாரா ? என்று பதிலடி கொடுத்தார். இதனையடுத்து மரு.ராமதாஸ் பட்டா இருக்கட்டும் 1985 க்கு முன் உள்ள மூல ஆவணங்கள் எங்கே என்று மீண்டும் கேள்வி எழுப்ப உரிய நேரத்தில் உரிய அலுவகத்தில் மூலப்பத்திரத்தை காண்பிப்போம் என்று
மு.க.ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காண்பிக்காமல் நழுவினார்.

இதே நேரத்தில் பாஜகவை சார்ந்த பேராசிரியர் சீனிவாசன் என்பவரும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது எனவே உடனடியாக விசாரித்து மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார் இதற்கிடையில் முரசொலி தொடர்பாக சில ஆவணங்கள் என்னிடம் உள்ளதாக கூறி தடா.பெரியசாமி என்பவரும் மனுதாராக இணைந்தார்.

இதனையடுத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முரசொலி அலுவலகம் தொடர்பாக விசாரணையை கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது அப்போது திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முரசொலி அலுவலகம் தொடர்பான விசாரணையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க கூடாது அதற்கு அந்த அதிகாரம் இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையம் விசாரிப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்று தெரிவித்தது.

அதன் பிறகு மீண்டும் விசாரணையை தொடங்கிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு திமுக விற்கு சம்மன் அளித்தது.இதனைத்தொடர்ந்து ஜனவரி 27 ஆம் தேதி திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி முரசொலி அலுவலகம் அஞ்சுகம் பதிப்பகத்தார் இடத்தில் வாடகைக்கு இருப்பதாக தெரிவித்தார்.இதே பதிலை தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கொரனோ நோய் தொற்றின் காரணமாக இது தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த வந்த நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்று கூறிய தடா பெரியசாமி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அஞ்சுகம் பதிப்பகத்தின் 50% மதிப்பு கலைஞருடைய மனைவின் பெயரில் உள்ளதாகவும்,அதற்கான சான்று திருவாரூரில் கலைஞர் போட்டியிட்ட போது தாக்கல் செய்யப்பட்ட சொத்து மதிப்பில் இருப்பதாகவும் கூறினார்.மேலும் 1974 ஆம் ஆண்டு அந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்தாற்கு மாதவன் நாயர் விற்றத்தற்கான மூலபத்திரம் இருக்கிறது ஆனால் இந்த பத்திரத்தில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது மேலும் மாதவன் நாயர் பிரிட்டிஷ் கம்பெனியிடமிருந்து பெற்றதாக கூறப்படுவதற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

இதுகுறித்து மேலும் விசாரிப்பதற்கு அலுவலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றி வசித்து வரும் பெரியோர்களிடம் விசாரிக்கும் போது அந்த இடத்தில் ஒரு பள்ளி இருந்ததாகவும் அந்த பள்ளியில் தான் அவர்கள் படித்ததாகவும் கூறினார்கள்.1973 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்
மாணவர்கள் அங்கு தங்கி படித்து இருக்கிறார்கள் பிறகு தான் இரவோடு இரவாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்த முரசொலி அலுவலகம் இடம் பற்றாக்குறையால் 1974 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த இடம் அதிகார பலத்தால் அபரிக்கப்பட்டது இதன் மூலம் அந்த இடம் பஞ்சமி நிலம் என்று உறுதியாகிறது.

தெரிந்தோ,தெரியாமலோ நடந்தது இன்று டாக்டர் ராமதாஸ் மூலம் விஸ்பரூபம் எடுத்து விட்டது எனவே தார்மீக பொறுப்பெடுத்து மு.க.ஸ்டாலின் அவர்கள் இது என்னுடைய காலத்தில் நடந்தது அல்ல என்னுடைய அப்பா காலத்தில் தெரிந்தோ,தெரியாமல் ஏற்பட்டு இருக்கலாம் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் சொந்தம் என்று பிரச்சினை வந்துவிட்ட நிலையில் சொத்தை பட்டியில் சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.இல்லையெனில் எதிர்வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துகளை அபகரித்தவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க போகிறீர்களா? என்று பிரச்சாரம் செய்வோம் என்று தடா.பெரியசாமி கூறி இருக்கிறார்

Leave a Comment