தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று

0
200

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் இன்று மட்டும் 5,146 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 2,61,459 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 53,499 பேர் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 67,275 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 34,99,300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தொடர்ந்து 7 வது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 989 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Previous articleபங்குச் சந்தையின் போக்கு! ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு!
Next article167 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த ரயில்வே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here