தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு  இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியா ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு  தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிராக சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாட தொடங்கினார். இந்நிலையில் இவர் இன்று தனது ஓய்வை அறிவித்தார். மேலும் இவர் தொடர்ந்து ஐ.பி.எல்.  போட்டியில் விளையாடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment