தமிழக வீரர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

0
175
மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்குவதாகவும். இந்த விருதுக்கு அடுத்தபடியாக வழங்குவது அர்ஜுனா விருது ஆகும். இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.
அந்த வகையில் இந்த முறை கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில்,  பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இந்த பரிந்துரை செய்த வீரர்களை தேர்வுக்குழு ஆராய்ந்து அதற்கு தகுதியான வீரர்களை தேர்வு செய்யும். அந்த வகையில் தமிழக வீரரான மாரியப்பன்  பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இவரையே கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Previous articleஉயிரை பணயம் வைத்து விளையாடிய வீரர்கள்
Next articleஇங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து இழப்பை ஈடுசெய்ய வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here