கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி த்ரிலிங்கான கடைசி ஓவர்

0
127

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் போட்டி டிரிபோகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் அமேசன் வாரியர்ஸ் அணிக்கும் இந்திய நேரப்படி இரவு 7.30 தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டு 17 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற டிரிபோகோ நைட் ரைடர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அமேசன் வாரியர்ஸ் 144 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 16.4 ஓவர்களில் வெற்றி பெற்றது

Previous articleபழைய டிவி, ரேடியோக்களில் சிவப்பு பாதரசம் தேடுவது மோசடியா? லாபமா?
Next articleகொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!