வடகொரியாவில் இப்படி ஒரு உத்தரவா?

0
127
வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்  உணவுபற்றாக்குறை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, நாய்களை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்படும் நாய்களில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்கா அல்லது இறைச்சி உணவகங்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
Previous articleதமிழகத்தில் மேலும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று! இன்றைய நிலவரம்!!
Next articleராணுவ தளபதிக்கு நேர்ந்த அவமரியாதை