லெபனான் நாட்டின் பிரதமரான ரபீக் ஹரிரி அந்நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் கடந்த 2005ம் ஆண்டு பயங்கர குண்டுவெடிப்பில் அவர் உட்பட 22 பேர் பலியாகினர். இந்த படுகொலை சம்பவமாக கடந்த 2015ம் ஆண்டு 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்தது அவர்கள் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள் இவர்கள் மீது
சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சர்வதேச கோர்ட்டு சலீம் அய்யாசை குற்றவாளியாக அறிவித்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இத்தகைய சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது.