உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகின்றனர். ஏனென்றால் நாய் மிகவும் நன்றி உள்ளதாகவும். சில வீடுகளில் தனது சொந்த உறவாகவே வளர்ப்பர். மனிதனிடம் எளிதில் பழகும் பிராணியாகும். ஜெர்மனியில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நாய்களைத் தினமும் இரு முறை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லவது ஆகும். ஒரு நாளைக்கு இருமுறை, மொத்தம் 1 மணி நேரம் நாய்களை உடற்பயிற்சிக்காக வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் என்கிறது புதிய சட்டம். நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகே, அந்தச் சட்டத்தை அறிமுகம் செய்ததாக ஜெர்மானிய வேளாண்மைத்துறை அமைச்சர் கூறினார்.