மழையால் ஐந்து ஓவராக குறைக்கப்பட்ட போட்டி

0
103

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் செயின்ட் லூசியா அணியும், பார்படாஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த பார்படாஸ் அணி 18.1 ஓவருக்கு 131 ரன்கள் எடுத்த நிலையில் மழை நீண்ட நேரமாக பெய்ததால் செயின்ட் லூசியா அணி டி.எல்.எஸ் விதிப்படி 5 ஓவர்களுக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய செயின்ட் லூசியா அணி 4.1 ஓவருக்கு 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Previous articleவிநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!
Next articleகரீபியன் லீக் : சொற்ப ரன்னில் சுருண்ட ஜமைக்கா அணி