சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் எடுடா வண்டிய… போடுடா விசில… என டுவிட்டரில் பதிவு

Photo of author

By Parthipan K

எட்டு அணிகள் பங்கேற்கும் பதிமுன்றவது  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி  அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.  முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே , சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐந்து  நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா,  உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சியை முடித்து  டோனி தலைமையிலான சிஎஸ்கே  அணி வீரர்கள் நேற்று மதியம் தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில், அணி வீரர்கள் மஞ்சள் நிற சீருடையுடன் புறப்படும் புகைப்படங்களை வெளியிட்டு விசில் போடு என்று  பதிவிட்டு இருந்தது.
அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வலது கை பேட்ஸ்மேனான இம்ரான் தாஹிர் இடம் பெற்றுள்ளார்.  அவர் மேலும் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், என் இனிய தமிழ் மக்களே.  உங்கள் நலம் நலமறிய ஆவல்.  பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம்.  இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசிகளோடு.  பாக்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்த எடுடா வண்டிய… போடுடா விசில… என கூறிள்ளார்.