இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

0
182

தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.ஆனால் இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகள் தேடி அலைந்த ஒரு நடிகரும் ஆவார். ஆனால் தற்பொழுது தன்னுடைய திறமையால் காமெடி திரையுலகில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்ட யோகிபாபு அவர்களின் கால்ஷீட்டிற்காக இன்று காத்திருக்கும் இயக்குனர்கள் பலர்.

இவர் அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் அப்பா விஷ்வநாத் ராணுவ வீரரக பணியாற்றியுள்ளார். இவரது அம்மா விசாலாட்சி.
இவர் யாருடைய தயவும் இல்லாமல் திரையுலகில் சாதித்துள்ளார்.இவர் தற்பொழுது தனக்காக பார்த்து பார்த்து ஒரு வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

அது மிகவும் வைரலாகி வருகிறது. இது பற்றிய புகைப்படங்களை தன் வீட்டில் நண்பர்களுடன் எடுத்து வெளியிட்டும் இருந்தார். இதில் பெரிய லிவ்விங் ரூம் மற்றும் மாஸ்டர் பெட்ரூம் போன்ற அறைகள் மிகவும் ரசனையுடன் கட்டப்பட்டிருந்தது.இவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய நண்பர்கள் அவரை ஊக்குவித்து பாராட்டியுள்ளனர்.

Previous articleமூன்றாவது டெஸ்ட் தடுமாற்றத்தில் பாகிஸ்தான்
Next articleடிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here